நம் நிலத்தின் வில்லங்க சான்று EC எப்படி கைபேசியில் பெறுவது!
வீடு, நிலம் போன்ற சொத்துகளை வாங்குவோர் அதன் முந்தைய உரிமையாளர்கள் பற்றி அறிந்துகொள்ளவும், சொத்தில் ஏதாவது வில்லங்கம் உள்ளதா என தெரிந்துகொள்ளவும் வில்லங்க சான்று பெறுவது வழக்கம்.
இன்று எல்லா வேலைகளையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே இணையம் வழியாக எளிதாகவும், வெற்றிகரமாகவும் செய்து முடிக்க முடிகிறது. அந்த வரிசையில் EC (என்கம்ப்ரன்ஸ் சர்டிபிகேட்-Encumbrance Certificate) எனப்படும் வில்லங்கச் சான்றிதழைகூட எளிதாக ஆன்லைனில் பெறலாம். முன்புபோல் வில்லங்கச் சான்றிதழ் கேட்டு பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நாட்கணக்கில் நடையாய் நடக்கவேண்டிய அவசியமில்லை. ஆனாலும் நம் மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு குறைவுதான். அமர்ந்த இடத்தில் இருந்தே ஆன்லைனில் வில்லங்கச் சான்றிதழை பெறலாம்.
நாம் இப்பொழுது நம் கைபேசியில் எப்படி நான் நிலத்தின் வில்லங்க சான்று தரவிறக்கம் செய்து பார்ப்பது என்பது பற்றிய முழு விளக்கங்களையும் பார்ப்போம்!
இப்பொழுது தோன்றும் திரையின் முகப்பு பக்கத்தில் இந்த வழிமுறையெய் பின்பற்றவும்,.
"முகப்பு பக்கம் >மின்னணு சேவைகள் > வில்லங்கச் சான்று > வில்லங்கச் சான்று விவரம் பார்வையிடுதல்"
இப்போது தோன்றும் "வில்லங்கச் சான்றுக்கான தேடுதல்" பக்கம் மூன்று தெர்வுகளை கொண்டது.
1) வில்லங்கச் சான்று 2) ஆவணம் வாரியாக 3) Plot Flat Wise
இப்போது வில்லங்கச் சான்று தேர்வை பயன்படுத்தி புல எண் & உட்பிரிவு எண் ( Survey No / Subdivision No.) மூலம் வில்லங்க சான்று பார்ப்பதை பார்ப்போம். .
கீழ் புறம் இருக்கும் "தரவு கிடைக்கும் காலத்திற்கு இங்கே சொடுக்கவும்" என்ற தேர்வை தேர்வு செய்து வில்லங்க சான்று தரவுகள் கிடைக்கும் காலங்களை காண முடியும்.
வில்லங்கச் சான்று என்ற தேர்வை தேர்வு சாய்தவுடன் தோன்றும் பக்கத்தில் உங்களது (1) மண்டலம்* (2) மாவட்டம்* (3) சார்பதிவாளர் அலுவலகம் * தேர்வு செய்யவும். அதன் பின்னர் வில்லங்கம் தேவைப்படும் (4) ஆரம்ப நாள்*(5) முடிவு நாள்* தேர்வு செய்யவும். பிறகு புல விவரங்களான (6) கிராமம்* (7) புல எண்* (8) உட்பிரிவு எண்(தேவைப்பட்டால்) உள்ளிட்டு (9) "சேர்க்க" பொத்தானை அழுத்தவும்.
"சேர்க்க" பொத்தானை அழுத்தியதும் நீங்கள் உள்ளிட்ட தரவுகள் கீழே தோன்றும். நீங்கள் அதை சரி பார்த்த பின்னர் அதன் கீழே "காண்பிக்கப்படும் குறியீட்டை" சரியாக உள்ளிட்டு அதன் பின்னர் "தேடுக" பொத்தானை அழுத்தவும்.
இப்பொழுது உங்களது உள்ளீடு தரவுகள் இயக்கப்பட்டு வில்லங்கச்சான்று தரவிறக்கம் செய்ய அதற்கான பக்கம் திறக்கும். திறக்கும் அந்த பக்கத்தில் "திருத்த இயலாநிலை ஆவண வடிவத்தை பதிவிறக்கம் செய்ய" என்ற வாக்கியதை கிளிக் செய்யவும்.
இப்பொழுது உங்களுக்கு தேவையான வில்லங்கச்சான்று உங்கள் கைபேசியில் தரவிறக்கம்(Download) ஆகும்.