தமிழ்நாடு அரசு நிலா விவர இணையதாளத்தின் முகப்பு பக்கத்துக்கு செல்ல வேண்டும்.
முகப்பு பக்கத்தில் இந்த வழிமுறையெய் பின்பற்றவும்,
"முகப்பு பக்கம் > பட்டா/சிட்டா விவரம் பார்வையிட"
இப்போது தோன்றும் பக்கத்தில் கீழ்கண்ட தேர்வுகளை பூர்த்திசெய்யவும் .
1) மாவட்டம் *
2) வட்டம் *
3) கிராமம் *
4) பட்டா /சிட்டா விவரங்களை பார்வையிட:*
5) அங்கீகார மதிப்பை உள்ளிடவும் *
6) சமர்ப்பி
மேற்கண்ட அணைத்து தேர்வுகளையும் சரியாக உள்ளீடு செய்த பின்னர் "சமர்ப்பி" பொத்தானை சொடுக்கவும்..
இப்பொழுது உங்களது உள்ளீடு தரவுகள் இயக்கப்பட்டு அதற்கான சிட்டா தோன்றும்.
சிட்டா சான்றினை சரி பார்த்தபின்னர் அதன் கீழ் உள்ள "Print" பொத்தானை அழுத்தவும்.
இப்பொழுது சிட்டவை PDF தரவாக சேமிக்கலாம் அல்லது அச்சிட்டு கொள்ளலாம்.
இந்த அணைத்து விளக்கங்களும் காணொளி (Video) -யாக பார்க்க கிழ்கண்ட இணைப்பில் பார்க்கலாம்!!