தமிழ்நாடு அரசு பதிவுத்துறை சேவையின் முகப்பு பக்கத்துக்கு செல்ல வேண்டும்.
பதிவுத்துறை சேவையின் இணைய பக்கத்துக்கு செல்க!
முகப்பு பக்கத்தில் இந்த வழிமுறையெய் பின்பற்றவும்,
"முகப்பு பக்கம் >மின்னணு சேவைகள் > வில்லங்கச் சான்று > வில்லங்கச் சான்று விவரம் பார்வையிடுதல்"
இப்போது தோன்றும் "வில்லங்கச் சான்றுக்கான தேடுதல்" பக்கம் மூன்று தெர்வுகளை கொண்டது.
1) வில்லங்கச் சான்று
2) ஆவணம் வாரியாக
3) Plot Flat Wise
இப்போது வில்லங்கச் சான்று தேர்வை பயன்படுத்தி புல எண் & உட்பிரிவு எண் ( Survey No / Subdivision No.) மூலம் வில்லங்க சான்று பார்ப்பதை பார்ப்போம்.
வில்லங்கச் சான்று என்ற தேர்வை தேர்வு சாய்தவுடன் தோன்றும் பக்கத்தில் உங்களது (1) மண்டலம்* (2) மாவட்டம்* (3) சார்பதிவாளர் அலுவலகம் * தேர்வு செய்யவும். அதன் பின்னர் வில்லங்கம் தேவைப்படும் (4) ஆரம்ப நாள்*(5) முடிவு நாள்* தேர்வு செய்யவும். பிறகு புல விவரங்களான (6) கிராமம்* (7) புல எண்* (8) உட்பிரிவு எண்(தேவைப்பட்டால்) உள்ளிட்டு (9) "சேர்க்க" பொத்தானை அழுத்தவும்.
"சேர்க்க" பொத்தானை அழுத்தியதும் நீங்கள் உள்ளிட்ட தரவுகள் கீழே தோன்றும். நீங்கள் அதை சரி பார்த்த பின்னர் அதன் கீழே "காண்பிக்கப்படும் குறியீட்டை" சரியாக உள்ளிட்டு அதன் பின்னர் "தேடுக" பொத்தானை அழுத்தவும்.
இப்பொழுது உங்களது உள்ளீடு தரவுகள் இயக்கப்பட்டு வில்லங்கச்சான்று தரவிறக்கம் செய்ய அதற்கான பக்கம் திறக்கும். திறக்கும் அந்த பக்கத்தில் "திருத்த இயலாநிலை ஆவண வடிவத்தை பதிவிறக்கம் செய்ய" என்ற வாக்கியதை கிளிக் செய்யவும்.
இப்பொழுது உங்களுக்கு தேவையான வில்லங்கச்சான்று தரவிறக்கம்(Download) ஆகும்.
தரவிறக்கம் ஆனா PDF வடிவிலான வில்லங்கச்சான்றை நீங்கள் தெறந்து பாக்கலாம் அல்லது அச்சிட்டுக்கொள்ளலாம்.
-*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*-
இப்போது ஆவணம் வாரியாக தேர்வை பயன்படுத்தி அதன் மூலம் வில்லங்க சான்று பார்ப்பதை பார்ப்போம்.
ஆவணம் வாரியாக என்ற தேர்வை தேர்வு சாய்தவுடன் தோன்றும் பக்கத்தில் உங்களது சார்பதிவாளர் அலுவலகம் * , ஆவண எண் * , ஆண்டு * தேர்வு செய்யவும். அதன் பின்னர் (1) Document Type*-யில் உங்களுக்கு தேவையான Document Type -யை தேர்ந்தெடுக்கவும். பின்னர் அதன் பக்கத்தில் "(2)காண்பிக்கப்படும் குறியீட்டை" சரியாக உள்ளிட்டு அதன் பின்னர் "(3)தேடுக" பொத்தானை அழுத்தவும்.
இப்போது நீங்கள் உள்ளீடு செய்த ஆவண எண்ணிருக்கான் அணைத்து விளக்கங்களும் காண்பிக்கப்படும். அவை அனைத்தையும் சரிபார்த்த பின்னர், "இறுதியில் காணும் வில்லங்கச் சான்று உருவாக்க இங்கே சொடுக்கவும்" என்ற வாக்கியத்தை சொடுக்கவும்.
இப்பொழுது வில்லங்கச்சான்று தரவிறக்கம் செய்ய அதற்கான பக்கம் திறக்கும். திறக்கும் அந்த பக்கத்தில் "திருத்த இயலாநிலை ஆவண வடிவத்தை பதிவிறக்கம் செய்ய" என்ற வாக்கியதை கிளிக் செய்யவும்.
இப்பொழுது உங்களுக்கு தேவையான வில்லங்கச்சான்று தரவிறக்கம்(Download) ஆகும்.
தரவிறக்கம் ஆனா PDF வடிவிலான வில்லங்கச்சான்றை நீங்கள் தெறந்து பாக்கலாம் அல்லது அச்சிட்டுக்கொள்ளலாம்.