தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய அட்டை எப்படி விண்ணப்பிப்பது..? e-SHARM Card How do Register Online..?

இது மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, தேசிய அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய அட்டையை விண்ணப்பிக்க நீங்கள் பொதுசேவை மையத்தையோ அல்லது உங்கள் ஸ்மார்ட் போனிலோ செய்யலாம்.

தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய அட்டை எப்படி விண்ணப்பிப்பது..? e-SHARM Card How do Register Online..?

இதற்கு விண்ணபிக்க தகுதியானவர்கள் யார்..?
  • அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியதிக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • வருமானவரி செலுத்துபவராக இருக்க கூடாது.
  • EPFO,ESIC பிடிமானம் பிடிக்கபடுபவர்களாக இருக்க கூடாது. 
விண்ணப்பிக்கும் வயது..?
இந்த  தேசியஅமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய அட்டையை விண்ணபிக்க உங்களுக்கு 16-59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தமிழக அரசின் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய அட்டையை வைத்திருப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
தேசிய அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய அட்டையை வைத்திருப்பவர்கள் பயன் என்ன..?
  • மத்திய அரசின் மருத்துவ உதவித்தொகை வழங்கப்படும்.
  • மாணவர்களுக்கு உயர் கல்விக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
  • சுயதொழில் செய்பவருக்கு கடன் தொகை வழங்கப்படும்.
  • மாணவர்கள் மத்திய அரசின் வேலைக்கு செல்லும்போது இந்த அட்டையை முன்னுரிமையாக எடுத்துக் கொள்ளப்படும்.
  • சுரக்கஷா திட்டத்தின் மூலமாக ஒரு வருட சந்தா விலக்கு அளிக்கப்படும்.
எவ்வாறு விண்ணப்பிக்கலாம்..?
இதற்கு விண்ணப்பிக்க https://register.eshram.gov.in/#/user/self என்ற இணையத்தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்..

தோன்றும் பக்கத்தில் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும் உங்களுடைய கைபேசி எண்ணை (1) உள்ளீடு செய்து அதன் கீழ்ப்புறத்தில் Captcha -ஐ (2) சரியாக உள்ளீடு செய்து அதன் பின்னர் Sent OTP (3) பொத்தானை சொடுக்கவும்.

இப்பொழுது தோன்றும் திரையில் உங்களுடைய ஆதார் எண்ணை உள்ளீடு செய்து அதன் கீழ்புறம் உள்ள கேப்ட்சா குறியீட்டை சரியாக உள்ளீடு செய்து படத்தில் காட்டியபடி Submit பொத்தானை சொடுக்கவும்.

இப்பொழுது நீங்கள் உள்ளீடு செய்த ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும் கைப்பேசியின் எண்ணிற்கு OTP அனுப்பப்படும், அந்த OTP -ஐ  உள்ளீடு செய்து Validate பொத்தானை சொடுக்கவும்.

இப்பொழுது தோன்றும் திரையில் தேவையான உங்களுடைய அனைத்து விவரங்களையும் பதிவு செய்து Save & Continue பொத்தானை சொடுக்கவும், கீழ்க்கண்ட படங்கள் தெளிவாக விளக்கங்கள் காட்டப்பட்டுள்ளன அதனை பின்பற்றவும்.

இப்பொழுது உங்களுடைய அனைத்து விவரங்களும் சேமிக்கப்பட்டு நீங்க உதவி செய்த முழு விவரங்களும் அனைத்தும் திரையில் தோன்றும் சரி பார்த்த பின்பு Submit பொத்தானை சொடுக்கவும்.

இப்பொழுது உங்களுக்கான பதிவு செய்யப்பட்ட தேசிய அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய பதிவு அட்டை திரையில் காண்பிக்கப்படும், இதன் மேல் புறம் இருக்கும் Download UAN Card பொத்தானை சொடுக்கி உங்களுடைய அட்டையை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு எளிய வழிமுறைகள் மிக எளிதாக நீங்களாகவே தேசிய அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய அட்டை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

வாழ்க தமிழ் !!

வளர்க தமிழ் !!

வாழ்க வளமுடன் !!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow