புது விதிகள்.. இன்று ஜூன் 1 முதல் அமல்.. பேங்க் அக்கவுண்ட் பேலன்ஸ்.. 3 ஆண்டுகளுக்கு மேல் காலி.. என்னென்ன?
புது விதிகள்.. இன்று ஜூன் 1 முதல் அமல்.. பேங்க் அக்கவுண்ட் பேலன்ஸ்.. 3 ஆண்டுகளுக்கு மேல் காலி.. என்னென்ன?
பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் செய்துவிட்டு அதை மூன்று ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருக்கும் கஸ்டமர்கள் மற்றும் பேலன்ஸ் இல்லாமல் அக்கவுண்ட்டை அப்படியே விட்டிருக்கும் கஸ்டமர்கள் இப்போது, முக்கியமான கேஒய்சி அப்டேட்டை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இல்லையென்றால், அவர்களது பேங்க் அக்கவுண்ட் மூடப்படும்.
இப்போதெல்லாம் பேங்க் அக்கவுண்ட் வைத்திருப்பது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. ஓப்பன் செய்துவிட்டு அதை அப்படியே விட்டுவிட முடியாது. அந்த அக்கவுண்ட்டை தொடர்ந்து பராமரிக்க வேண்டி இருக்கிறது. இல்லையென்றால், இப்படிப்பட்ட அக்கவுண்ட்டுக்கு அபராதம் விதிப்பது மட்டுமல்லாமல், அந்த அக்கவுண்ட்டையே மூடும் முடிவையும் வங்கிகள் எடுக்கின்றன.
எந்தெந்த அக்கவுண்ட்கள் மூடப்படும்?
நீங்கள் பேங்க் அக்கவுண்ட்டை ஓப்பன் செய்த பிறகு அந்த அக்கவுண்ட் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக (ஏப்ரல் 30 2024ஆம் ஆண்டு வரையில்) பயன்படுத்தாமல் வைத்திருத்தல் மற்றும் ஜீரே பேலன்ஸ் இருத்தல் அல்லது நோ பேலன்ஸ் கொண்ட கணக்குகள் ஜூன் 1ஆம் தேதி முதல் மூடப்பட இருக்கின்றன.
எந்தெந்த அக்கவுண்ட்கள் மூடப்படாது?
ஒருவேளை உங்களது அக்கவுண்ட்டானது, டீமேட் அக்கவுண்ட் (DEMAT Accounts) உடன் இணைக்கப்பட்டு அந்த கணக்கை நீங்கள் பராமரித்துவந்தால் மூடப்படாது. அதேபோல பேங்க் லாக்கர்கள் (Lockers) மூடப்படாது. மேலும், 25 வயதுக்குட்பட்டவர்களின் (மாணவர்கள் உள்பட) பேங்க் அக்கவுண்ட்கள் மூடப்படாது.மை
னர் பேங்க் அக்கவுண்ட்கள் மற்றும் கோர்ட் அல்லது வருமான வரித்துறையால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கும் பேங்க் அக்கவுண்ட்கள் மூடப்படாது. இதை தவிர மற்ற அக்கவுண்ட்கள் ஜூன் 1ஆம் தேதி முதல் மூடப்பட இருக்கின்றன. இருப்பினும், அவர்களுக்கு மே 31ஆம் தேதி வரையில் கடைசி வாய்ப்பு இருக்கிறது.
KYC ஆவணங்களை அப்டேட் செய்தல்:
மேற்கூறிய விதிகள் பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) கஸ்டமர்களுக்கு மட்டுமே அமலுக்கு வருகிறது. ஆகவே, அந்த பேங்கில் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்கள் உடனடியாக கேஒய்சி ஆவணங்களை அப்டேட் செய்துவிட்டால், அவர்களது அக்கவுண்ட்கள் மூடப்படுவதில் இருந்து மீட்கப்படும்.
உங்களது அடையாள சான்றிதழுக்காக பான் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றையும், இருப்பிட சான்றிதழுக்காக மின்சார கட்டண ரசீது, குடிநீர் கட்டண ரசீது, வீட்டு வரி ரசீது ஆகியவற்றையும் எடுத்து கொண்டு அருகில் இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையை (Punjab National Bank Branch) அணுகுங்கள்.மேற்கூறியவற்றை அங்கு கேஒய்சி ஆவணங்களாக அப்டேட் செய்து, மூன்று ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருக்கும் உங்களது அக்கவுண்ட்டை மீண்டும் ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். இனிமேல் உங்களது அக்கவுண்ட் மூடப்படாது. வங்கிக்கு செல்லும் முன் உங்களது அக்கவுண்ட் செயலற்ற நிலையில் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.
What's Your Reaction?