ஆன்லைனில் ஆதார் பிவிசி (PVC) அட்டை விண்ணப்பித்து பெறுவது எப்படி? Aadhaar PVC Card Jest Rs.50 Only!
ஆன்லைனில் AAdhaar PVC Card ரூ.50 செலுத்தி விண்ணப்பித்து பெறுவது எப்படி என்பது பற்றி இப்பொழுது பார்ப்போம். நீங்கள் ஆதார் எண்ணுடன் உங்களுடைய கைபேசி எண்ணை இணைத்திருந்தால் மிக எளியது. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் கைபேசி எண் தற்போது இல்லை என்றாலும் தற்போது கையில் இருக்கும் கைபேசி எண்ணை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் ஆதார் பிவிசி அட்டை விண்ணப்பித்து ரூ.50 செலுத்தி அட்டை பெறுவது எப்படி என்பது பற்றி இப்பொழுது பார்ப்போம். நீங்கள் ஆதார் எண்ணுடன் உங்களுடைய கைபேசி எண்ணை இணைத்திருந்தால் மிக எளியது.
கைபேசி எண்ணை ஆதாருடன் இணைக்க வில்லை அல்லது ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி எண் தொலைந்து விட்டால் நீங்கள் ஆதார் பிவிசி அட்டையை பெறுவதற்கு கீழே இரண்டாவது பாகத்தில் அதற்கான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
முதலில் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும் கைபேசி எண்ணை பயன்படுத்தி எப்படி பிவிசி அட்டை விண்ணப்பிப்பது என்பது பற்றி பார்ப்போம்.
பிவிசி அட்டை விண்ணப்பிக்க My Aadhaar இணையதளத்திற்கு உள்நுழையவும். https://myaadhaar.uidai.gov.in/
இப்பொழுது ஆதார் எண் உள்ளீடு செய்து ஆதார் கார்டில் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும் OTP மூலம் உள்நுழைவு செய்ய வேண்டும்.
இப்பொழுது ஆதார் வலை பக்கத்தில் காணப்படும் "ஆதார் பி வி சி அட்டை ஆடர் செய்க" என்ற ஆப்ஷனை தேர்வுசெய்யவும்.
இப்பொழுது உங்களுடைய ஆதார் காண தரவுகள் காண்பிக்கப்படும் சரி பார்த்த பின்னர் கீழே இருக்கும் அடுத்தது என்ற பொத்தானை சொடுக்கவும்.
இப்பொழுது தோன்றும் பணம் செலுத்துவதற்கான உறுதிப்படுத்துதல் பக்கத்தில் உறுதிப்படுத்துதல் தேர்வு செய்த பின்னர் பணம் செலுத்து என்ற பொத்தானை சொடுக்கவும்.
பணம் செலுத்துவதற்கான பக்கத்தில் உங்களுக்கு விருப்பம் உள்ள பணம் செலுத்தும் தேர்வை தேர்வு செய்து பணம் செலுத்தவும்.
பணம் செலுத்துதல் வெற்றிகரமாக முடிந்த பின்னர் உங்களுக்கு ஒப்புகை சீட்டு இருக்கானா பக்கம் தோன்றும் இதில் ஒப்புகை சீட்டை தரவிறக்கம் செய்த பின்னர் ஓரிரு நாட்கள் காத்திருக்கவும்.
நீங்கள் பணம் செலுத்துதல் உறுதி செய்தபின்னர் உங்களுடைய பிவிசி அட்டை அச்சிட ஆரம்பிக்கப்படும். அச்சிடல் முடிவடைந்த உடன் உங்களுடைய கைப்பேசிக்கு தகவல் அனுப்பப்படுவர். உங்களுடைய ஆதார் முகவரிக்கு அச்சடிக்கப்பட்ட பிவிசி அட்டை அனுப்பி வைக்கப்படுவர்.
உங்கள் முகவரிக்கு அட்டை அனுப்பியவுடன் அதற்கான டிராக்கிங் நம்பர் விவரங்கள் உங்களுடைய மை ஆதார் பக்கத்தில் காண்பிக்கப்படும்.
மை ஆதார் பக்கத்தில் கீழ்ப்புறம் உள்ள கோரிக்கை ஏரியாவில் உங்களுடைய கொள்கைகளுக்கான விளக்கங்கள் முழுவதும் காண்பிக்கப்படும்.
மிக முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது ஆதார் எந்த முகவரியில் உள்ளதோ அந்த முகவரிக்கு பிவிசி அட்டை சென்றடையும்.
============================================
உங்களிடம் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும் கைபேசி எண் இல்லை என்றால் ஆதார் பிவிசி அட்டை எப்படி விண்ணப்பிப்பது என்று பற்றி தகவல்களை இப்போது பார்ப்போம்.
மை ஆதார் வலைப்பக்கத்திற்கு உள்நுழையவும் : https://myaadhaar.uidai.gov.in/
இப்பொழுது ஆதார் வலை பக்கத்தில் முன் பக்கத்தில் நடு புறம் காணப்படும் "ஆதார் பி வி சி அட்டை ஆடர்" என்ற ஆப்ஷனை தேர்வுசெய்யவும்.
இப்பொழுது தோன்றும் திரையில் உங்களுடைய ஆதார் எண்ணை உள்ளீடு செய்து அதன் பின்னர் பாதுகாப்பு குறியீடு உள்ளீடு செய்யவும்.
அதன் பிறகு அதன் கீழ்புறம் இருக்கும் மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை என்ற தேர்வை தேர்வு செய்து கொள்ளவும்.
எப்பொழுது கீழே தோன்றும் கைபேசி எண் உள்ளீர்காண இடத்தில் தங்களிடம் இருக்கும் தற்போதைய கைபேசி எண்ணை உள்ளீடு செய்து ஓட்டியை அனுப்புக என்ற பொத்தானை சொடுக்கவும்.
இப்பொழுது நீங்கள் உள்ளீடு செய்த தற்போதைய கைபேசி எண்ணிற்கு ஓட்டி பி அனுப்பப்பட்டிருக்கும் அந்த போட்டியை சரியாக உள்ளீடு செய்து அதன் பின்னர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்ற தேர்வை தேர்வு செய்து அதன் கீழ்புறம் இருக்கும் சமர்ப்பிக்க என்ற பொத்தானை சொடுக்கவும்.
இப்பொழுது நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் தோன்றும், இதில் SRN# என்ற ட்ராக்கிங் நம்பரை குறிப்பேட்டில் குறித்து வைத்துக்கொள்ளவும், இது உங்களுடைய PVC அட்டையின் அச்சிடல் நிலை தெரிந்துகொள்ள உதவும்.
பணம் செலுத்துதல் முடிவடைந்தவுடன் தோன்றும் திரையில் உங்களுடைய ஒப்புகை சீட்டினை தரவிறக்கம் செய்து கொள்ளவும், ஆதார் அட்டையில் உள்ள முகவரிக்கு அச்சிடல் முடிந்தவுடன் அனுப்பி வைக்கப்படும்.
இந்த அணைத்து விளக்கங்களும் காணொளி காட்சிகளாக காண கீழே இருக்கும் யூடியூப் காணொளியை காணவும்!
வாழ்க தமிழ் !! வளர்க தமிழ் !!
வாழ்க வளமுடன்
What's Your Reaction?