உங்கள் ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி ?

இ சேவை பயன்படுத்தி உங்கள் ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி என்பது பற்றிய விளக்கங்கள்

உங்கள் ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி ?

முதலில் உங்களது Browser ஓப்பன் செய்யவும் பிறகு அதில் https://uidai.gov.in/ என்ற இணைய தளத்தை தேடவும்.

இப்போது அதன் முகப்பு பக்கம் வரும் அதில் மை ஆதார் என்ற தேர்வை தேர்வுசெய்யவும்.

அதில் டவுன்லோட் ஆதார் இந்த தேர்வை தேர்வுசெய்யவும்.

இப்போது நியூ டேபிள் ஆதார் கார்டு டவுன்லோட் செய்வதற்கான படிவம் வரும்.

முதலில் உங்கள் ஆதார் எண் அல்லது என்விரான்மென்ட் நம்பர் அல்லது விர்ச்சுவல் ஐடி நம்பர் இதில் ஏதேனும் ஒன்றை பதிவுசெய்யவும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள காப்சா வெரிஃபிகேஷன் கோடை உள்ளிடவும்.

இரண்டையும் என்டர் செய்த பிறகு சென்ட் ஓ டி பி யை கிளிக் செய்யவும்.

இப்போது உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு ஒருமுறை கடவுச்சொல் ஆன ஓ டி பி வரும் அதனை இதில் புதிவு செய்யவும்.

பிறகு கீழே இரு கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் அதற்கு உங்கள் விருப்பமான தேர்வுகளை தேர்வு செய்யலாம்.

தேர்வு செய்த பிறகு வெரிஃபிகேஷன் டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

இப்போது உங்கள் ஆதார் கார்டு என்னது பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்யப்படும் .

அந்த பி டி எஃப் க்கு கடவுச்சொல் பாதுகாக்கப்பட்டிருக்கும்.

உங்களுக்கான கடவுச்சொல் உங்கள் ஆதார் உள்ள பெயரில் முதல் நான்கு எழுத்துக்களையும் உங்கள் பிறந்த தேதியின் உங்கள் பிறந்த வருடத்தில் உள்ள 4 எண்ணை இணைத்து கடவுச் செல்லாக உள்ளிட வேண்டும்.

உதாரணமாக :
உங்கள் ஆதார் கார்டில் Kumar A என்று இருந்து உங்கள் பிறந்த வருடம் 1992 என்றால் உங்கள் கடவுச்சொல் KUMA1992 என்று உள்ளிடவும்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow