முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்
திட்டம் :
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் வழங்குவதற்காகவும், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
• தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம் அனைத்து மக்களுக்கும் உலகத்தரத்தில் மருத்துவ சேவை வழங்கப்படும். இத்திட்டத்தினால் சுமார் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர்.
• இந்த திட்டத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1027 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யபட்டுள்ளது. முழு விவரங்களையும் பார்க்க இங்கே சொடுக்கவும்!!
• இந்த திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன் பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயன்கள் :
• அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நோய்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்க்கு, ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைகளுக்கான மருத்துவ பட்டியல் பார்க்க இங்கே சொடுக்கவும்.
• இந்த திட்டத்தில் மருத்துவ சிகிச்சைகள் மட்டுமல்லாமல் நோய் கண்டறியும் சோதனைகளும் [இணைப்பு ‘F’] மற்றும் தொடர் சிகிச்சைகளும் [இணைப்பு ‘E’] வழங்கப்படுகின்றன.
உதவி மையம் :
• இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும் குறைகளை தொிவிப்பதற்கும் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை தொலைபேசி எண் 1800 425 3993 மூலம் தொடர்பு கொள்ளலாம்.
இப்பொழுது முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி என்பது பற்றி பார்க்கலாம்:
* முக்கியமாக குடும்பவருட வருமானம் ரூ.120000 க்கும் குறைவானதாக இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள் :
* பழைய குடும்ப அட்டை மற்றும் நகல்
* புதிய குடும்ப அட்டை மற்றும் நகல்
* குடும்ப தலைவர் மற்றும் உறுப்பினர் ஆதார் அட்டை மற்றும் நகல்
* கிராம நிர்வாக அதிகாரியின் வருமான வரி சான்றிதழ்
பழைய குடும்ப அட்டை இல்லை என்றால் கவலை வேண்டாம்!!
மின்னணு குடும்ப அட்டையை பதிவிறக்கம் செய்து, அதனை இணைக்கவும். மின்னணு குடும்ப அட்டையில் தற்போதைய அணைத்து குடும்ப உறுப்பினரக்ள் விவரங்கள் மற்றும் பழைய,புதிய குடும்ப அட்டை எண் மற்றும் அட்டை தொடர்பான அணைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மின்னணு குடும்ப அட்டையை எப்படி பதிவிறக்கம் செய்வது ?
கிராம நிர்வாக அதிகாரியிடம் வருமான வரி சான்றிதழ் பெற கிழ்கண்ட Application Download செய்து அதில் ஆண்டு வருமானம் ரூ.120000 க்கும் 'குறைவாக' உள்ளீடு செய்து அவரது கையொப்பம் மற்றும் முத்திரையை பெறவும்.
கிராம நிர்வாக அதிகாரியிடம் வருமான வரி சான்றிதழ் பெற்ற பின்பு மேற்கண்ட ஆவணங்கள் அசல் மற்றும் நக்கலுடன் உங்களது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பாக துவங்கப்பட்டுள்ள "முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பதிவு மையம்" -ற்கு செல்லவும்.
பதிவு மையத்திற்கு குடும்ப தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர் அல்லது அனைவரும் செல்லலாம். பதிவு மைய அலுவலர் விவரங்களை சரிபார்த்த பின்னர் புகைப்படம் மற்றும் கைரேகை பதிவுகளை பெற்றுக்கொண்டு உடனடியாக மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கி விடுவார். இதற்கு எந்த கட்டணமும் கிடையாது.
Files
What's Your Reaction?