PM KISAN: பிரதமரின் விவசாயத் திட்டத்தில் ரூ. 4000 பெற நீங்கள் செய்ய வேண்டியவை!
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் 10வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வருகிற டிசம்பர் 15 முதல் 25 வரை, அதாவது இன்னும் ஒரு சில நாட்களில் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் 10வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வருகிற டிசம்பர் 15 முதல் 25 வரை, அதாவது இன்னும் ஒரு சில நாட்களில் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், பல விவசாயிகளுக்கு இம்முறை ஒதுக்கப்பட்ட தவணையில் ரூ.2,000 பணத்திற்கு பதிலாக ரூ.4,000 கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது சில விவசாயிகளுக்கு ஒன்பதாவது மற்றும் 10வது தவணைகள் ஒன்றாக இணைத்து வழங்கப்படும். அதனால் அவர்களுக்கு அதிக பணம் கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்குக் காரணம், PM கிசான் திட்டத்தின் ஒன்பதாவது தவணையை மத்திய அரசு முன்பு வெளியிட்டபோது பல விவசாயிகளுக்குப் பணம் கிடைக்கவில்லை என்பது தான். PM கிசான் திட்டம் என்பது நரேந்திர மோடி அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பல அரசாங்க ஆதரவு ஓய்வூதிய திட்டங்களில் ஒன்றாகும்.
நிதி உதவி தேவைப்படும் விவசாயி குடும்பங்களுக்கு ஆதரவாக 2018 டிசம்பரில் இந்தத் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. 2019 பிப்ரவரியில் பிரதமர் மோடி இத்திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், விவசாய குடும்பங்களுக்கு உதவுவதற்காக 2022 நிதியாண்டில் PM KISAN திட்டத்திற்காக இதுவரை 43,000 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் PM Kisan இணையதளத்தில் உள்ள ஒரு குறிப்பு, இந்தத் திட்டத்தை முழுவதுமாக விவரித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, "பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PIV-KISAN) என்பது, நாட்டில் உள்ள அனைத்து நிலத்தை வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கும் அவர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வருமான ஆதரவை வழங்குவதற்கான ஒரு புதிய மத்தியத் துறைத் திட்டமாகும். இந்த திட்டத்தில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் மற்றும் உள்நாட்டு தேவைகள் தொடர்பான உள்ளீடுகள் ஆகியவை அடங்கும்.
இத்திட்டத்தின் கீழ், இலக்கு வைக்கப்பட்ட பயனாளிகளுக்கு பலன்களை வழங்குவதற்கான முழு நிதிப் பொறுப்பும் இந்திய அரசால் ஏற்கப்படும்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த குறிப்பில், விவசாயிகளின் காலாண்டு வருமானத்தை அவர்களின் PM கிசான் கணக்கில் வரவு வைக்கப்படும் ஒரு சில நாட்களில் மையத்திலிருந்து ஒரு நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால், பயனாளிகள் PM Kisan இன் அதிகாரப்பூர்வ இணையதளமான pmkisan.gov.in இல் உள்நுழைந்து சரிபார்த்து கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டிருந்தது.
பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் வரும் ஒவ்வொரு விவசாய குடும்பமும், தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளில், அரசிடமிருந்து ஆண்டுக்கு ரூ.6,000 பெற தகுதியுடையவர்கள். இது ஆண்டு முழுவதும் மூன்று காலாண்டு தவணைகளில் வழங்கப்படுகிறது. தங்கள் பெயரில் சாகுபடி நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயி குடும்பங்களும், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள். இருப்பினும், நிறுவன நில உரிமையாளர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் திட்டத்தின் கீழ் தகுதியற்றவர்களாக கருதப்படுவர்.
பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயி குடும்பங்கள் மற்றும் பயனாளிகளின் பட்டியல் பஞ்சாயத்துகளில் பார்வைக்கு வைக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது தகவலின் சிறந்த வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதாகும். இது தவிர, இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், உத்தியோகபூர்வ முறையில் உருவாக்கப்பட்ட எஸ்எம்எஸ் மூலம் விவசாயி குடும்பங்களுக்கு பலன்கள் வழங்கப்படுவதை அறிவிப்பதற்கு பொறுப்புடையதாக இருக்கும். PM கிசான் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் விவசாயிகள், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ PM Kisan போர்ட்டலில் உள்ள விவசாயிகள் கார்னர் மூலம் தங்களது நிலையைச் சரிபார்க்கலாம்.
PM கிசான் பயனாளியின் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை பின்வருமாறு காணலாம்.
1. pmkisan.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்
2. அதன் முகப்புப்பக்கத்தில், விவசாயிகள் கார்னர் (Farmers Corner) என்ற தனிப் பகுதியை நீங்கள் பார்க்க முடியும்
3. விவசாயிகள் கார்னர் பிரிவில், 'பயனாளி நிலை' (Beneficiary Status)என்ற டேப் உள்ளது. அதை கிளிக் செய்யவும்
4. நீங்கள் நேரடியாக கூட https://pmkisan.gov.in/BeneficiaryStatus.aspx என்ற லிங்கிற்கு செல்லலாம்.
5. உங்களுக்கு தேவையான திரை வந்தவுடன் அதில், ஆதார் எண், PM கிசான் கணக்கு எண் அல்லது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் போன்ற விவரங்களை உள்ளிடவும்.
6. விவரங்களைப் பூர்த்தி செய்த பிறகு, தரவினை பெற விருப்பத்தை கிளிக் செய்யவும். அதன் பிறகு நீங்கள் உங்கள் நிலையைப் பார்க்க முடியும்.
What's Your Reaction?