வெறும் ரூ.50-ல் பான் அட்டை மறு பதிப்பு விண்ணப்பிப்பது எப்படி? How do Apply Pan Card RePrint jest Rs.50 ?

பான் அட்டை தொலைந்துவிட்டால் புதிய அட்டை மறு பதிப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றிய விளக்கங்கள்.

வெறும் ரூ.50-ல் பான் அட்டை மறு பதிப்பு விண்ணப்பிப்பது எப்படி? How do Apply Pan Card RePrint jest Rs.50 ?

பான் அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது வேறு அட்டை தேவைப்பட்டாலோ மிக எளிதாக ரூ.50 ஐ ஆன்லைனில் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

இதை எப்படி என்பதை எப்போது பார்ப்போம்.

இப்போது உங்களது கைபேசி அல்லது கணினியில் https://www.onlineservices.nsdl.com/paam/ReprintEPan.html இந்த இணைப்பை திறக்கவும்.

இப்போது NSDL ன் Request for Reprint of PAN Card க்கான பக்கம் தோன்றும்.

இந்த பக்கத்தில் உங்களது பான் என், ஆதார் என், பிறந்த நாள் இந்த தரவுகளை உள்ளீடு செய்து அதன் கீழ்புறம் இருக்கும் செக் பாஸ் டிக் செய்து Captcha வை சரியாக உள்ளீடு செய்யவும். அதன் பிறகு Submit பொத்தானை கிளிக் செய்யவும்.

இப்பொழுது உங்களது பான் அட்டைக்கான தரவுகள் திரை தோன்றும். இவை அணைத்தையும் சரிபார்த்த பின்னர் படத்தில் கட்டிய செக் பாஸ்க்களை டிக் செய்து அதன் பின்னர்  Generated  OTP  பொத்தானை கிளிக் செய்யவும்.

இப்பொழுது உங்களது கைபேசி மற்றும் மின்னஞ்சலுக்கு OTP அனுப்பப்பட்டிருக்கும். அதை சரியாக உள்ளீடு செய்து Validate பொத்தானை கிளிக் செய்யவும்.

இப்பத்து Mode of Payment திரை தோன்றும். அதில் உங்களுக்கு விருப்பமான Payment Option ஐ தேர்வு செய்து ரூ 50 செலுத்தவும்.

கட்டணம் செலுத்துவது வெற்றிகரமாக முடித்தவுடன் நீங்கள் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது காண்பிக்கப்டும். இதை நீங்கள் தரவிறக்கம் செய்துகொள்ளவும்.

இவ்வாறு பதிவு செய்த 14 நாட்களில் உங்களது பான் கார்டு பதிவில் உள்ள முகவரிக்கு உங்களது பபுதிய மறுபதிப்பு அட்டை அனுப்பப்படும்.


குறிப்பு : உங்களது பான் அட்டை தற்போது எந்த முகவரி பதிவில் உள்ளதோ அந்த முகவரிக்கே அட்டை அனுப்ப படும். எனவே மறுபதிப்பிற்கு பணம் செலுத்தும் முன் முகவரியை உறுதி படுத்திக்கொள்ளவும்.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow