பதிவு செய்யப்பட்ட பத்திரத்தின் நகல் எப்படி ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது?
சொத்து சம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தின் நகல் எப்படி ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது என்பது பற்றி பார்ப்போம்.
சொத்து சம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தின் நகல் எப்படி ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது என்பது பற்றி பார்ப்போம்.
இதற்கு பதிவு துறையின் இணைய பக்கத்திற்கு செல்லவேண்டும். https://tnreginet.gov.in/portal/index.jsp
பதிவு துறையில் ஏற்கனவே பயனர் பதிவு செய்திருக்க வேண்டும்.
பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் சரியாக உள்ளீடு செய்த பின் உள் நுழை பொத்தானை கிளிக் செய்து உள்நுழையவும்.
உள்நுழைந்த பின்னர் "முகப்பு பக்கம் >மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > தேடல் மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல் விண்ணப்பிக்க" இந்த முறைப்படி கிளிக் செய்யவும்.
தோன்றும் திரையில் உங்களுக்கு தேவையான ஆவண வகைப்பாடு, ஆவண எண், சார்பதிவாளர் அலுவலகம், ஆண்டு, புத்தக எண் இவைகளை உள்ளீடு செய்து காண்பிக்கப்படும் குறியீட்யினை உள்ளீடு செய்யவும்.
இதற்கு முன் "தரவு கிடைக்கும் காலத்திற்கு இங்கே சொடுக்கவும்" என்ற லிங்கை கிளிக் செய்து தரவுகள் கெடுக்கும் வருடத்தை உறுதி படுத்திக்கொள்ளவும்.
அதன் பின்னர் தேடுக பொத்தானை சொடுக்கவும்.
இப்போது ஆவண விவரங்கள் தோன்றும் அதனை சரிபார்த்தபின்னர் "இணையவழி விண்ணப்பிக்க" பொத்தானை சொடுக்கவும்.
இப்போது உங்களுடைய பெயர் மற்றும் கைபேசி எண் உள்ளீடு செய்து சேமிக்க மற்றும் அடுத்த பக்கம் செல்க பொத்தானை சொடுக்கவும்.
இப்போது சரி பொத்தானை சொடுக்கவும்.
அடுத்த பக்கத்தில் விண்ணப்ப எண் உருவாக்கப்பட்டு அதற்க்கான கட்டண விவரங்கள் காமிக்கப்படும். அதனை சரி பார்த்தபின் செலுத்துக பொத்தானை சொடுக்கவும்.
அடுத்த பக்கத்தில் உங்களது முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளீடு செய்து சமர்ப்பிக்க பொத்தானை சொடுக்கவும்.
தற்போது செலுத்துக பொத்தானை சொடுக்கவும்.
இப்போது தோன்றும் திரையில் பணம் செலுத்துவதற்க்கான option தேர்வு செய்து சமர்ப்பிக்க பொத்தானை சொடுக்கவும்.
இப்போது தோன்றும் திரையில் பணம் ஆம் பொத்தானை சொடுக்கவும்.
இப்போது தோன்றும் திரையில் செக் டிக் செய்த பின் சமர்ப்பிக்க பொத்தானை சொடுக்கவும்.
இப்போது தோன்றும் திரையில் பணம் செலுத்துவதற்காண தேர்வினை தேர்வு செய்து பணம் செலுத்தவும்.
பணம் செலுத்துவதற்க்கான பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிந்தபின்னர் ஒப்புகை சீட்டு பதிவிறக்க தேரை தோன்றும்.
இப்பொழுது திருத்த இயலாத நிலை ஆவணத்தை பதிவிறக்கம் செய்க என்ற பொத்தானை கிளிக் செய்து ஒப்புகை சீட்டினை தரவிறக்கம் செய்து கொள்ளவும்
ஒப்புகை சீட்டினை தரவிறக்கம் செய்த பின்பு தாங்கள் விண்ணப்பித்த சொத்து பத்திரம் நகல் விண்ணப்பம் ஏற்கப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயனாளர் பெயர் மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி உள் நுழைந்த பின்பு முகப்பு பக்கத்தில் மின்னணு சேவைகள் சான்றளிக்கப்பட்ட நகல் கோரிக்கை பட்டியல் என்ற வழிமுறையில் சென்று தங்களது விண்ணப்பத்தை பார்த்துக் கொள்ளலாம் விண்ணப்பங்கள் பூர்த்தி அடைந்ததும் அதற்கான தரவிறக்க அதில் காணப்பெறும் அந்த லிங்கை க்ளிக் செய்வதன் மூலம் உங்களது நகல் பத்திரத்தை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் இந்த லிங்க் வருவதற்கு ஒரு சில நாட்கள் ஆகும் அதுவரை காத்திருக்க வேண்டும்.
இந்த அனைத்து செயல்முறை விளக்கங்களும் வீடியோவாக பார்க்க கீழே இருக்கும் யூட்யூப் வீடியோவை பார்க்கவும்
What's Your Reaction?