ஒரு கிராமத்தின் வரைபடம் எப்படி தரவிறக்கம் செய்வது ? How do download village map online ?
தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தின் முழு கிராம வரைபடம் (Village Map) எப்படி ஆன்லைனில் தரவிறக்கம் செய்வது என்பது பற்றிய செயல்முறை விளக்கங்கள்.
தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தின் முழு கிராம வரைபடம் (Village Map) எப்படி ஆன்லைனில் தரவிறக்கம் செய்வது என்பது பற்றி பார்ப்போம்..
கீழ்கண்ட இணைய பக்கத்தை திறக்கவும்
Click Hare !!
தோன்றும் பக்கத்தில் மாவட்டம் தாலுக்கா மற்றும் கிராமம் இவைகளை சரியாக தேர்ந்தெடுக்கவும் .. தேந்தெடுத்த பின்பு 'Submit' பொத்தானை கிளிக் செய்யவும்..
இப்பொழுது நீங்கள் உள்ளீடு செய்த கிராமத்திற்கான விளக்கம் தோன்றும். அதனை தேர்வு செய்து கீழ்புறம் இருக்கும் 'Next' பொத்தானை கிளிக் செய்யவும்..
இப்பொழுது தோன்றும் பக்கத்தில் உங்களது Email முகவரி, உங்களது Mobile Number, அடையாள வகை மற்றும் என் மற்றும் இதர விளக்கங்களை உள்ளீடு செய்யவும். இறுதியாக Captcha சரியாக உள்ளீடு செய்து 'Submit' கிளிக் செய்யவும்..
இப்பொழுது உங்களுக்கான கிராமத்தின் வரைபடம் 'Preview' பக்கம் இருக்கும், இதில் உங்களுக்கான வரைபடத்தை சரி பார்த்து கொள்ளலாம். மேலும் இந்த வரைபடத்தை தரவிறக்கம் செய்ய நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தி வரைபடத்தை தரவிறக்கம் செய்ய கீழே இருக்கும் 'Pay' பொத்தானை சொடுக்கவும்.
இப்பொழுது உங்களுக்கு விருப்பமான ஆன்லைன் கட்டண சேவையை தேர்ந்தெடுத்து கட்டணத்தை செலுத்தவும்.
கட்டணம் செலுத்துதல் வெற்றிகரமாக முடித்தவுடன் அதற்க்கான பக்கம் தோன்றும், அதில் 'Next' பொத்தானை சொடுக்கவும்.
இப்பொழுது தோன்றும் பக்கத்தில் காணப்படும் 'Click to Download' பொத்தானை சொடுக்கி நீங்கள் உங்களுக்கான கிராம வரைபடத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் எந்த வரைபடம் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டிருக்கும்.
What's Your Reaction?