மின்னணு குடும்ப அட்டையை எப்படி பதிவிறக்கம் செய்வது ?
மின்னணு குடும்ப அட்டையை எப்படி நாமாகவே நம் கைபேசியில் பதிவிறக்கம் செய்வது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
மின்னணு குடும்ப அட்டையில் தற்போதைய குடும்ப தலைவர் மற்றும் அணைத்து குடும்ப உறுப்பினரக்ள் விவரங்கள் மற்றும் பழைய,புதிய குடும்ப அட்டை எண் மற்றும் அட்டை தொடர்பான அணைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.
மின்னணு குடும்ப அட்டையை பெற கிழ்கண்ட இணைப்பை சொடுக்கவும்.
https://tnpds.gov.in/login.xhtml
இப்பொழுது குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள தங்கள் 10 இலக்க கைபேசி எண்ணை உள்ளிட்டு "பதிவு செய்" அழுத்தவும். நீங்கள் கேப்ட்சா குறியீடு உள்ளிடுவதற்காக வழிநடத்தப்படுவீர்கள். சரியான கேப்ட்சா குறியீடு உள்ளிட்ட பிறகு, தாங்கள் ஒரு முறை கடவுச்சொல்(லை) உடனடியாக பெறுவீர்கள்.
ஒரு முறை கடவுச்சொல் -லை சரியாக உள்ளீடு செய்து "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும்.
இப்பொழுது உங்களுக்கான குடும்ப அட்டை Database தோன்றும். பக்கத்தில் கீழ்புறம் நகர்த்தி "மின்னணு அட்டை கோப்பு பதிவிறக்கம்" பொத்தானை சொடுக்கவும்.
இப்பொழுது உங்களுக்கான மின்னணு குடும்ப அட்டை தோன்றும், அதனை தரவிறக்கம் அல்லது பகிர்ந்துகொள்ளலாம்.
What's Your Reaction?