விதவை சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பித்து ரூ 60 மட்டும் செலுத்தி மிக எளிதாக பெறுவது எப்படி?

விதவை சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பித்து ரூ 60 மட்டும் செலுத்தி மிக எளிதாக பெறுவது எப்படி என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

விதவை சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பித்து ரூ 60 மட்டும் செலுத்தி மிக எளிதாக பெறுவது எப்படி?

விதவை சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :

  •     புகைப்படம் 
  •     ஆதார் அட்டை 
  •     கணவர் இறப்பு சான்றிதழ்
  •     இறந்தவர் தனது கணவர் என்பதற்கு ஆதார நகல் ஒன்று

TNeGA -வின் வலைப்பக்கத்திற்கு செல்லவும்..

https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx 

   முகப்பு பக்கத்தில் Login செய்ய வேண்டும். இதற்கு பயனாளர் கணக்கு மிக அவசியம். பயனாளர் கணக்கு இல்லை என்றால் புதிய பயனாளர் கணக்கை உருவாக்கவும். புதிய பயனாளர் கணக்கை உருவாக்க இங்கே சொடுக்கவும்!

 

     User Name, Password  பயன்படுத்தி அல்லது கைபேசி என் பயன்படுத்தி ஒரு முறை கடவுச்சொல் மூலம்  மிக எளிதாக உள்நுழையலாம். 

    Sevices>  Revenue Department  > REV-109 Widow Certificate  இந்த வழிமுறைகளை பின்பற்றவும்.

    தோன்றும் பக்கத்தில் ' Proceed ' பொத்தானை சொடுக்கவும். 

     தோன்றும் பக்கத்தில் விதவை சான்றிதழ் விண்ணப்பிப்பவரின் குடிமகன் கணக்கு என் (CAN)  உள்ளீடு செய்வது அவசியம்.  குடிமகன் கணக்கு என் இல்லையென்றால் இங்கே சொடுக்கவும்.

விதவை சான்றிதழ் விண்ணப்பிப்பவர் ஏற்கனவே குடிமகன் கணக்கு என் வைத்திருந்தால் அதை பார்ப்பது மிக எளிது. 

    Applicant Mobile Number (2) என்ற இடத்தில் அவரின் கைபேசி என்னை உள்ளீடு சாய்த்து அல்லது Aadhaar Number* (3) என்ற இடத்தில் அவரின் ஆதார் என் உள்ளீடு செய்த்து  'Search' (4) பொத்தானை சொடுக்கவும்.

  இப்பொழுது அவரின் CAN கீழ்புறம் (5) படத்தில் காண்பித்தபடி தோன்றும். இப்பொது அந்த CAN என்னை சொடுக்கவும்.  

  அதன் பின் கீழ்புறம் தோன்றும் Aadhaar Number* (6) என்ற இடத்தில் ஆதார் என் மற்றும் Applicant Date of Birth* (7) என்ற இடத்தில் பிறந்த நாட்களை உள்ளீடு செய்த்து 'Generate OTP' (8) பொத்தானை சொடுக்கி OTP யை உள்ளீடு செய்து 'Conform OTP' (9) பொத்தானை சொடுக்கவும். 

  இப்பொழுது மேல்புறம் தோன்றும் 'Proceed' பொத்தானை சொடுக்கவும்.

   இப்பொழுது தோன்றும் பக்கத்தில் படத்தில் காண்பித்தபடி கணவர் இறப்பு பதிவு சான்றிதழ் என் மற்றும் இறந்த வருடம் இவைகளை சரியாக உள்ளீடு செய்து கீழ்புறம் இருக்கும் 'Submit' பொத்தானை சொடுக்கவும்.

    இப்பொழுது தோன்றும் பக்கத்தில் முதலில் 'Download Self declaration form' என்ற வாக்கியத்தை சொடுக்கி அதற்க்க்கான பக்கத்தை தரவிறக்கம் செய்து  அந்த பக்கத்தை Print செய்து அதில் விண்ணப்பதாரர் கையொப்பம் இட்டு அந்த பக்கத்தை Scan செய்து அதனை தரவேற்றம் செய்யவும். மற்றும் புகைப்படம் மற்றும் கணவர் இறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை மற்றும் அதில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை ஒன்றன் பின் ஒன்றாக Add செய்யவும்.

    அனைத்து ஆவணங்களையும் சரியாக தரவேற்றம் செய்த பின்பு கீழ்புறம் 'Make Payment' என்ற பொத்தான் தோன்றும். அந்த பொத்தானை சொடுக்கவும். (குறிப்பு: தேவையான ஆவணங்களை தரவேற்றம் செய்த பின்னு மட்டுமே Make Payment பொத்தான் தோன்றும்.)

   இப்பொழுது  தோன்றும் பக்கத்தில் I agree கட்டத்தில் டிக் செய்து Make Payment பொத்தானை சொடுக்கவும்.

  தோன்றும் பக்கத்தில் உங்களுக்கு விருப்பமான opion தேர்வு செய்து பணம் செலுத்தவும்.

     கட்டணம் செலுத்துவது வெற்றிகரமாக முடிந்தவுடன் அதற்க்கான ஒப்புகை பக்கம் தோன்றும். அதன் பின்பு முதல் பக்கத்தில் Transaction Details என்ற வாக்கியத்தை சொடுக்கி அதன் பின் தோன்றும் பக்கத்தில் விண்ணப்பத்திற்க்கான  Transaction  No. Copy செய்து, அதன் பின் Check Status என்ற வாக்கியத்தை சொடுக்கி Transaction  No. உள்ளீடு செய்து உங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ளலாம்.

'அல்லது'

முதல் பக்கத்தில் Check Status என்ற வாக்கியத்தை சொடுக்கி அதன் பின் தோன்றும் பக்கத்தில் விண்ணப்ப நாட்களை உள்ளீடு செய்து உங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ளலாம்.

 Current Status ல் Application Approved காணும் பொது நீங்கள் Download certificate என்ற லிங்கை சொடுக்கி உங்களது சான்றிதழை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு சிறிது காலம் காத்திருக்க நேரிடலாம்.

வாழ்க தமிழ் !!

வளர்க தமிழ் !!

வாழ்க வளமுடன்  !!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow