மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை நாமாகவே பெறுவது எப்படி ?

மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை ABHA (AYUSHMAN HEALTH) நாமாகவே பெறுவது எப்படி என்பது பற்றி பார்ப்போம்

மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை  நாமாகவே பெறுவது எப்படி ?

    மத்திய அரசின் 'ஆயுஷ்மான் பவா' திட்டம்  இப்போது *ABHA* ஹெல்த் கார்டாக மாற்றப்பட்டுள்ளது, இதற்காக  மத்திய அரசு இணையதளம் ஒன்றை திறந்துள்ளது. இதில் யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். 5 லட்சம் மதிப்பு வரையிலான சுகாதார காப்பீடு முற்றிலும் இலவசமாக அதற்க்கான மருத்துவமனைகளில் பெறமுடியும் .

   இந்த காப்பீட்டு அட்டையை எப்படி பெறுவது என்பது பற்றி நாம் பார்க்கலாம். இதற்க்கு முதலில் கிழ்கண்ட இணையதளத்தை திறக்கவும்.

https://healthid.ndhm.gov.in/register

   இப்பொழுது தோன்றும் பக்கத்தில் "Generate via Aadhaar" என்ற பொத்தானை சொடுக்கவும்.

  இப்பொழுது தோன்றும் பக்கத்தில் அட்டை விண்ணப்பிப்பவரின் ஆதார் எண்ணை உள்ளிடுசெய்து படத்தில் கட்டிய உள்ளீடுகளை செய்து Submit பொத்தானை சொடுக்கவும்.

   இப்பொழுது தோன்றும் ஆதார் வெரிஃபிகேஷன் பக்கத்தில் ஆதார் OTP யை உள்ளீடுசெய்து Submit பொத்தானை சொடுக்கவும். 

   

   இப்பொழுது தோன்றும் மொபைல் என்  வெரிஃபிகேஷன் பக்கத்தில் கைபேசி என்னை உள்ளீடு செய்து, அந்த கைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும்  OTP யை உள்ளீடுசெய்து Submit பொத்தானை சொடுக்கவும்.

   இப்பொழுது தோன்றும் பக்கத்தில் படத்தில் காட்டியபடி உள்ளீடுகளை உள்ளீடுசெய்து Submit  பொத்தானை சொடுக்கவும்.

இப்பொழுது உங்களுக்கான ABHA அட்டை பதிவு செய்யப்பட்டு அதற்க்கான பக்கம் தோன்றும்.  அதில் 'Download ABHA Card' பொத்தானை சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Share

What's Your Reaction?

Like Like 29
Dislike Dislike 3
Love Love 12
Funny Funny 3
கோபம் கோபம் 8
Sad Sad 3
Wow Wow 13