தந்தை அல்லது தாய் இறந்துவிட்டால் வாரிசுகள் பெயரில் பட்டா மாற்றுவது எப்படி?

தந்தை அல்லது தாய் இறந்துவிட்டால் வாரிசுகள் பெயரில் பட்டா பெயர் மாற்றம் எப்படி செய்வது என்பது பற்றிய விளக்கங்கள்.

தந்தை அல்லது தாய் இறந்துவிட்டால் வாரிசுகள் பெயரில் பட்டா மாற்றுவது எப்படி?

தந்தை அல்லது தாய் இறந்துவிட்டால் வாரிசுகள் பெயரில் பட்டா மாற்றுவது எப்படி?

1) தந்தை (அ) தாய் இறந்து விட்டால் அவர்களில்  பெயரில் உள்ள பட்டவை வாரிசு சான்று வைத்து வாரிசுகள் பெயரில் கூட்டு பட்டாவாக மாற்றி கொள்ளலாம்.

2) தந்தை (அ) தாய் இறந்து விட்டால் அவர்களில் பெயரில் உள்ள பட்டாவை வைத்து பாகபிரிவினை செய்வதன் மூலம் வாரிசுகள் தனி தனியாக அவர் அவர்களின் பெயரில் பட்டா மாற்றி கொள்ளலாம்.

1) தந்தை (அ) தாய் இறந்து விட்டால் அவர்களில்  பெயரில் உள்ள பட்டவை வாரிசு சான்று வைத்து வாரிசுகள் பெயரில் கூட்டு பட்டாவாக மாற்றி கொள்ளலாம்.உதாரணமாக : தந்தை இறந்து விட்டார் என்று எடுத்து கொள்வோம். இப்போது அவர் பெயரில் உள்ள சொத்துகளை பட்டா மாற்றம் செய்ய, என்ன என்ன ஆவணம் தேவை? எங்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும்? யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்?தேவையான ஆவணம் : தந்தை பெயரில் உள்ள பட்டா , தந்தையின் இறப்பு சான்று மற்றும் வாரிசு சான்று. தந்தையின் தாய் இறந்துவிட்டால் அவரின் இறப்பு சான்று.வாரிசு சான்று : தந்தை இறந்ததால் – வாரிசு சான்றில்தந்தை இறந்ததாக காட்டி வாரிசுகளின் பெயர்களை சேர்த்து  வாங்கவேண்டும். 

எங்கு பட்டா மற்றும் செய்ய வேண்டும் : உங்கள் அருகில் உள்ள அரசு இ சேவை மையத்துக்கு சென்று விண்ணப்பம் செய்யுங்கள். செலவு ரூபாய் 60.

யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும் : Non-Involving Subdivision கீழ் விண்ணப்பிக்க வேண்டும். ஆதாவது கிராம நிர்வாக அலுவலருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.

புதிய பட்டா : வாரிசு சான்றில் உள்ள நபர்களின் பெயரிகளில் வழங்கப்படும்.

2) தந்தை (அ) தாய் இறந்து விட்டால் அவர்களில்  பெயரில் உள்ள பட்டாவை வைத்து பாகபிரிவினை செய்வதன் மூலம் வாரிசுகள் தனி தனியாக அவர் அவர்களின் பெயரில் பட்டா மாற்றி கொள்ளலாம்.

உதாரணமாக : தந்தை இறந்து விட்டார் என்று எடுத்து கொள்வோம். இப்போது அவர் பெயரில் உள்ள சொத்துகளை வாரிசுகள் பெயரில் தனி தனியாக பட்டா மாற்றம் செய்ய, என்ன என்ன ஆவணம் தேவை? எங்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும்? யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்?

தேவையான ஆவணம் : பாகபிரிவினை பத்திரம் , தந்தை பெயரில் உள்ள பட்டா , தந்தையின் இறப்பு சான்று மற்றும் வாரிசு சான்று. தந்தையின் தாய் இறந்துவிட்டால் அவரின் இறப்பு சான்று.

வாரிசு சான்று : தந்தை இறந்ததால் – வாரிசு சான்றில் தந்தை இறந்ததாக காட்டி வாரிசுகளின் பெயர்களை சேர்த்து வாங்கவேண்டும்.

பகபிரிவு பத்திரத்தின் போது எந்தந்த வாரிசுக்கு எந்தந்த நிலம், எவ்வளவு நிலம், அதன் எல்லை விவரங்கள் அதைத்தும் அட்டவைனை செய்திருக்க வேண்டும்.

எங்கு பட்டா மற்றும் செய்ய வேண்டும் : உங்கள் அருகில் உள்ள அரசு இ சேவை மையத்துக்கு சென்று விண்ணப்பம் செய்யுங்கள். செலவு ரூபாய் 60.

யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும் : உங்களுக்கு ஒரு புலன் எண்ணில் உள்ள மொத்த நிலம் சென்றோடைகிறது எனில் அதை கிராம நிர்வாக அலுவலருக்கும், ஒரு புலன் எண்ணில் பாதி அல்லது குறிப்பிட அளவு மட்டும் வந்தால் அதை நில அளைவயருக்கு விண்ணபிக்க வேண்டும்.

பாகபிரிவினை பத்திரத்தை கொண்டு வாரிசுகள் தனி தனியாக பட்டா அவர் அவர் பெயரில் விண்ணபித்து  அவர்கனில் பெயரில் பட்டா வங்கிக்கொள்ளலாம். 

தந்தை மற்றும் தாய் இருவருமே இருந்து இறந்தால் எப்படி பட்டா மாற்றுவது?

தந்தை மற்றும் தாய் இருவரும் இறந்து விட்டால் அவர்களில் இறப்பு சான்று , வாரிசு சான்று , மற்றும் தந்தை அல்லது தாய் பெயரில் உள்ள பட்டா வைத்து  வாரிசுகள் தங்கள் பெயரில் நேரடியாய்க பட்டா மாற்றி  கொள்ளலாம் அல்லது பாகபிரிவினை பத்திரமாக பதிவு செய்து பத்திரத்தை வைத்து தனி தனியாக பட்டா மாற்றி கொள்ளலாம்.

  •  நீங்கள் இ சேவையில் விண்ணப்பித்த பிறகு, உங்களுக்கு ஒப்புகைசீட்டு அளிக்கப்படும்.
  • நீங்கள் அந்த ஒப்புகைசீட்டு, இறப்பு சான்று, வாரிசு சான்று, பட்டா, வில்லங்கச்சான்று மற்றும் மனு ஒன்று எழுதி சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகரிடம் அளிக்கவேண்டும். 
  • உங்கள் மனு மற்றும் நகல்களை கிராம நிர்வாக அலுவலருக்கு நேரில் சென்று அளிப்பதை விட பதிவு அஞ்சல் மற்றும் AD கார்டுடன்  அனுப்புவது சிறந்தது .
  • அவர் அந்த மனுவை பரிசிலனை செய்து தங்களுக்கு புதிய பட்டா வழங்குவர்.
  • மனு அளிக்கும் போது குறிப்பில் அரசாணை(நிலை) எண் : 73 நாள் : 11.06.2018-டின் படி என்று குறிப்பிடவும். இந்த அரசாணை மனுவை எப்படி கையாளுவது என்பதை குறிப்பிடுகிறது.
  • மனு அளிக்கப்பட்டதர்க்கான ஒப்புகைசீட்டை கேட்டு வாங்கிவைத்து கொள்ளவும். அப்போதுதான் மனு அளிக்கப்பட்டதாக நீதிமன்றம் ஏற்கும்.
  • மனு எழுதி அதை கிராம நிர்வாக அலுவலரிடம் அளிபதர்க்கு முன் ஒரு நகல் எடுத்து வைத்து கொள்ளவும்.

இந்த இரண்டு முறையில் எது சிறந்தது
முதல் முறையை பயன்படுத்தி பட்டா மாற்றம் செய்வதால் குறைந்த செலவு ஆகும் . கூட்டு பட்டாவாக வழங்கப்படும், அதனால் நீங்கள் ஏதேனும் நிலத்தின் மேல் கடனோ அல்லது விவசாயகடனோ வாங்கினால் அது உங்களுக்கு அலைச்சலையும் ஏற்படுத்தும். அதுமட்டும் இன்றி வாரிசுகள் பெயரில் பட்டா மாறியபிறகு நிலத்தை விற்க நினைத்தால் வாரிசுகள் அனைவரும் கையொப்பம் இடவேண்டும். 
இரண்டாவது முறையை பயன்படுத்தி பட்டா மாற்றம் செய்வதால் சிறிய தொகை செலவு செய்யவேண்டி இருக்கும். அதுவும் பத்திரம் வாங்குவதற்கும் , பத்திரத்தை பதிவு செய்வதற்கும் ஆகும் செலவுதான்.நான் உங்களுக்கு இந்த இரண்டாவுது முறையை தான் சிபாரிசு செய்வேன் . ஏன் என்றால் வாரிசுகள் பெயரில் தனி தனி பத்திரம் வழங்கப்படும். அவர்கள் இப்போது கடன் பெறவிரும்புகிரார்களோ அப்போது அவர்கள் எலிமையாக பெற்று கொள்ளலாம். அவர் அவர் நிலத்தை எலிமையாக மற்றவர்களுக்கு விற்கலாம், . தனி தனி பட்டாவாக பெற்று கொள்ளலாம் . 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow