TNeGA -ல் இ-சேவை பயனாளர் கணக்கை எப்படி உருவாக்குவது?

TNeGA -ல் புதிய பயனாளர் கணக்கை எப்படி உருவாக்குவது என்பது பற்றிய முழு விளக்கப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களுடைய புதிய பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொள்ள முடியும்.

TNeGA -ல் இ-சேவை பயனாளர் கணக்கை எப்படி உருவாக்குவது?

உங்களுடைய புதிய பயனாளர் கணக்கை உருவாக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும், இதன் மூலம் உங்களுக்கு தேவையான சான்றிதழ்கள் நீங்களே வீட்டில் இருந்தபடி விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கு மிக குறைந்த பணம் செலவாகும், மற்ற இ-சேவை மையங்களுக்கு அல்லது வேறு இணைய நிறுவனங்களுக்கு செல்லும் பொழுது உங்களுக்கு மிக அதிகப்படியான செலவுகள் ஆகும், எனவே நீங்கள் உருவாக்கும் இந்த புதிய பயனாளர் கணக்கை பயன்படுத்தி நீங்களாகவே உங்களுக்கு தேவையான இருப்பிட சான்றிதழ், ஜாதி சான்றிதழ், பிறப்பு இறப்பு சான்றிதழ், சிறு குறு விவசாயி சான்றிதழ், மற்றும் பலதரப்பட்ட சான்றிதழ்களை நீங்கள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும்.

இதற்கு முதலில் நீங்கள் உங்களுடைய பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொள்ள வேண்டும் இதற்கு உங்களுடைய பெயர் கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் அட்டை எண் போன்ற தலைவர்கள் தேவைப்படுகின்றன.

கீழ்காணும் வழிமுறைகளை பயன்படுத்தி உங்களுடைய கணக்கு உருவாக்கிக் கொள்ள முடியும்.

இதற்கு முதலில் கீழ்க்கண்ட இணைப்பில் TNeGA-வின் வலைபக்கத்திற்குச் செல்க.

https://www.tnesevai.tn.gov.in/

TNeGA வலைப்பக்கத்தில் பயனாளர் உள்நுழைவு கிளிக் செய்யவும்.

இப்போது தோன்றும் திரையில் புதிய பயனாளர் கணக்கு உருவாக்க (New User? SignUp hare) என்ற வாக்கியத்தை சொடுக்கவும்.

இப்பொழுது புதிய பயனாளர் கணக்கு தொடங்குவதற்கான பக்கம் தோன்றும் இதில் உங்களது பெயர் மாவட்டம் தாலுக்கா மற்றும் உங்களது கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் ஆதார் எண், பயனாளர் பெயர், மற்றும் கடவுச் சொல் போன்ற தகவல்களை உள்ளீடு செய்து Sign Up என்ற பொத்தானை சொடுக்கவும்.

இப்பொழுது உங்களது கைபேசி எண்ணிற்கு OTP- ஒரு முறை கடவுச்சொல் அனுப்பப்படும், அதை உள்ளீடு செய்து உங்களது அக்கவுண்டில் உறுதி செய்து கொள்ளவும்.

அதன் பிறகு உள்நுழைவு பக்கத்தில் உங்களுடைய பயனாளர் பெயர் மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையலாம் அல்லது உங்களது கைபேசி எண்ணை பயன்படுத்தி அதற்கு ஓட்டிட்டு ஒருமுறை கடவுச்சொல்லை அனுப்புவதன் மூலம் உள்நுழையலாம்.

மேற்கண்ட அனைத்து விளக்கங்களும் காணொளியாக காண கீழ்க்கண்ட யூடியூப் வீடியோவை பார்க்கவும் மற்றும் எங்களது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.

எங்கள் வலைதளத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி !!

* வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! *

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow