விண்ணப்பித்த சான்றிதழ்களை இ-சேவைக்கு போகாமல் பதிவிறக்கம் செய்வது எப்படி ?
E SEVAI SERVICE நீங்கள் இ-சேவையில் விண்ணப்பித்த சான்றிதழ்களை இ-சேவைக்கு போகாமல் பதிவிறக்கம் செய்வது எப்படி ?
இந்த பதிவில் நீங்கள் (e Sevai) இ-சேவை மூலம் விண்ணப்பித்த சான்றிதழ்களை இ-சேவை மையத்துக்கு செல்லாமலே உங்கள் முபைல் அல்லது கணினி மூலம் பதிவிறக்கம் செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
நீங்கள் உங்கள் சான்றிதழை பதிவிறக்கம்செய்யவிரும்பினால் உங்கள் விண்ணப்பம்மானது துறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்று இருக்க வேண்டும்(நிராகரித்து இருக்க கூடாது). அப்போது தான் உங்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.
உங்கள் சான்றிதழ் விண்ணப்ப நிலையே அறிவது எப்படி என்பதற்க்கான பதிவு ஏற்கனவே நமது இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது அதற்க்கான லிங்க் இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்ய பின் வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.
இதற்க்கு முதலில் உங்கள் முபைல் அல்லது கணினியில் உங்களுக்கு விருப்பம்மான Browser-ரை ஓப்பன் செய்யவும்.
அதில் https://tnedistrict.tn.gov.in/tneda/ என்ற இணையதளத்தை தேடவும்.
இப்போது உங்களுக்கு அந்த இணையதளத்தின் முகப்பு பக்கம் வரும். அதில் Verify Certificate எனும் தேர்வை தேர்ந்து எடுக்கவும்.
இப்போது Certificate Number எனும் இடத்தில் உங்களது விண்ணப்பம் எண்ணை( TN-52020987654321 ) பதிவு செய்யவும்.
விண்ணப்ப எண்ணை பதிவு செய்த பிறகு Search எனும் பட்டனை அழுத்தவும்.
இப்போது உங்கள் சான்றிதழ் விவரங்கள் வரும் அதில் Status Detail என்ற இடத்தில் நீங்கள் விண்ணப்பித்த சான்றிதழின் பெயர் , விண்ணப்பித்த தேதி , விண்ணப்ப நிலை மற்றும் Download certificate என்று இருக்கும்.
அதில் விண்ணப்ப நிலை(Status) என்ற இடத்தில் Certificate approved என்று இருக்க வேண்டும் அப்போது தான் உங்கள் சான்றிதழ் பதிவிறக்கம் செய்வதற்க்கான Download Certificate எனும் தேர்வு வரும்.
அந்த Download Certificate எனும் தேர்வை கிளிக் செய்து உங்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
What's Your Reaction?